Saturday, November 16, 2024
HomeFast Foodஉருளைக்கிழங்கு சாட் - Aloo Chaat Recipe in Tamil

உருளைக்கிழங்கு சாட் – Aloo Chaat Recipe in Tamil


உருளைக்கிழங்கு சாட் ஒரு அட்டகாசமான மாலை நேர சாட் ஆகும். இதை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே குறைந்த நேரத்தில் எந்தவித சலிப்பும் இன்றி நாம் செய்துவிடலாம்.

சாட் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர உணவு ஆகும். சாட்களில் பல வகை இருக்கிறது. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் உருளைக்கிழங்கு சாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான உருளைக்கிழங்கு சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

உருளைக்கிழங்கு சாட் – Aloo Chaat Recipe in Tamil

Aloo Chaat / Potato Chaat

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

உருளைக்கிழங்கு சாட்டை எந்தவித சமையல் அனுபவம் இல்லாதவர் கூட முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். என்றாவது மாலை நேரத்தில் நாம் சோர்வாக இருக்கும் பொழுது ஏதேனும் சுவையான மாலை நேர உணவை சுவைக்க வேண்டும் என்று தோன்றினால் உங்களின் சாய்ஸ் ஆக இந்த உருளைக்கிழங்கு சாட் இருப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இதை மிக எளிதில் நாம் செய்துவிடலாம். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய நாம் முதலில் ஸ்பெஷலான புளி சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னியை தயார் செய்வோம். நாம் உருளைக்கிழங்கு சாட் செய்ய பயன்படுத்தும் வறுத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா, பிளாக் சால்ட், மற்றும் நாம் தயாரித்த ஸ்பெஷலான சட்னிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து அட்டகாசமாக இருக்கும். அதனுடன் நாம் சேர்க்கும் ஓமப்பொடி மற்றும் மாதுளை பழ விதைகளுடன் சேர்ந்து வேற லெவல்லான சுவைக்கு சென்று விடும்.

சில குறிப்புகள்:

உருளைக்கிழங்கை நாம் நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு விட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

உருளைக்கிழங்கு சாட் இந்திய துணை கண்டத்தில் உதயமானதாக வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதை வட இந்தியாவில் ஆலு சாட் என்று அழைக்கிறார்கள். ஆலு என்றால் இந்தி மொழியில் உருளைக்கிழங்கு என்று பொருள், சாட் என்றால் சுவைப்பது என்று பொருள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் இந்த உருளைக்கிழங்கு சாட்டை மக்கள் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

உருளைக்கிழங்கு சாட்டை முழுமையாக சுமார் 40 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு சாட்டை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒரு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் இதை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

உருளைக்கிழங்கு சாட் செய்ய நாம் உபயோகிக்கும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் வெங்காயத்தில் புரத சத்து, தண்ணீர் சத்து, நார் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் Ok உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் உபயோகிக்கும் மாதுளை பழ விதைகளில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை இருதயம், மூளை, மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்க்கு உதவுகிறது.

Aloo ChaatAloo Chaat
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments