Tuesday, January 21, 2025
HomeFast Foodகொத்தமல்லி சாதம் - Kothamalli Sadam Recipe in Tamil

கொத்தமல்லி சாதம் – Kothamalli Sadam Recipe in Tamil


கொத்தமல்லி சாதம் மிகவும் சுவையான மற்றும் சத்தான ஒரு உணவு ஆகும். இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு கட்சிதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி என்றாலே பெரும்பாலும் ஐந்தில் இருந்து பத்து ரெசிபிகள் தான் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் குறைந்த நேரத்தில் மிகுந்த சிரமமின்றி செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் ஏராளம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான கொத்தமல்லி சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான கொத்தமல்லி சாதத்தின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

கொத்தமல்லி சாதம் – Kothamalli Sadam Recipe in Tamil

Coriander Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

கொத்தமல்லி சாதம் நாம் வழக்கமாக செய்யும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்றவைக்கு ஒரு அருமையான மாற்று. நாம் வழக்கமாக செய்து சலித்து போன லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளை தவிர்த்து இந்த வித்தியாசமான கொத்தமல்லி சாதத்தை செய்து கொடுத்தால் நம் பிள்ளைகளும் மிகுந்த ஆர்வத்தோடு இதை சுவைப்பார்கள். இந்த கொத்தமல்லி சாதத்தை நீங்கள் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் பிள்ளைகள் இதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்தார்கள் என்பதை எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

கொத்தமல்லி சாதம் செய்ய நாம் முதலில் கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் துருவிய தேங்காயை கொண்டு ஸ்பெஷலான மசாலா பேஸ்ட்டை தயார் செய்வோம். இந்த மசாலா பேஸ்ட் நாம் சேர்க்கும் வேகவைத்த பாசுமதி அரிசி, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், வறுத்த முந்திரிப் பருப்பு, மற்றும் வேர்கடலையுடன் நன்கு ஒன்றோடு ஒன்று வெந்து மிக அட்டகாசமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

கொத்தமல்லியை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் பயிரிட்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இவை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக உதயமானவை என்பதால் கொத்தமல்லி சாதம் எந்த நாட்டில் முதல் முதலாக செய்யப்பட்டது என்பதற்கான தெளிவான தரவுகள் இல்லை. இருப்பினும் வரலாற்று ஆய்வாளர்கள் இவை ஆசிய கண்டத்திலோ அல்லது வட ஆப்பிரிக்காவிலோ அல்லது தென் ஐரோப்பாவிலோ உதயமாகி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

கொத்தமல்லி சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

கொத்தமல்லி சாதத்தை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

கொத்தமல்லி சாதத்தை சுமார் ஒரு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து சுவைக்கலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

கொத்தமல்லி சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் Ok மற்றும் A உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் பீன்ஸில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் B 6 உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் Ok மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Coriander RiceCoriander Rice
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments