Sunday, January 19, 2025
HomeFast Foodசேமியா புலாவ் - Semiya Pulao Recipe in Tamil

சேமியா புலாவ் – Semiya Pulao Recipe in Tamil


சேமியா புலாவ் மிகவும் சுவையான மற்றும் ரிச்சான ஒரு உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி சொற்பமான பொருட்களை கொண்டு குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இவை ஒரு கச்சிதமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

எப்பொழுதுமே ஏதாவது வித்தியாசமான மற்றும் சுவையான உணவை நாம் சுவைக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் யாருக்கு தான் இல்லாமல் இருக்கும்? இல்லை அந்த ஆர்வம் குறைந்து தான் போய்விடுமா? அதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என்று நம்மில் பல பேர் எந்தவித தயக்கமும் இன்றி ஒப்புக் கொள்வோம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது சேமியாவை கொண்டு வித்தியாசமான முறையில் செய்யப்படும் சேமியா புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சேமியா புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

சேமியா புலாவ் – Semiya Pulao Recipe in Tamil

Semiya Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

ரிச்சான உணவுகளில் மிக எளிதில் செய்யக்கூடிய உணவு என்றால் எந்தவித சந்தேகம் இன்றி புலாவ் என்று நாம் கூறலாம். அதில் இந்த வித்தியாசமான சேமியா புலாவ் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது மட்டுமின்றி அதன் பேரை கேட்ட உடனே கேட்பவர்களை ஆச்சரியமும் அடைய செய்து விடும். நம்ப வில்லையா? ஒரு சின்ன பரிசோதனையாக உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இந்த வாரம் நீங்கள் சேமியா புலாவை செய்யப் போகிறீர்கள் என்று சொல்லிப் பாருங்கள். பின்னர் அவர்களது ரியாக்ஷனை கவனியுங்கள் குறிப்பாக சுட்டீஸ்களின் ரியாக்ஷனை கவனியுங்கள் நாங்கள் சொன்னது உண்மையா பொய்யா என்று உங்களுக்கே தெரிந்து விடும். நீங்கள் இந்த சேமியா புலாவை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

சேமியா புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் சேமியா, முட்டை, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகு தூள், ஏலக்காய், இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, மற்றும் பிரியாணி இலை போன்ற மசாலா பொருட்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து மிக மணமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். நிச்சயம் இதை உங்கள் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

இவ் உணவின் வரலாறு:

வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் புலாவ் முதல் முதலாக எட்டாம் நூற்றாண்டின் போது Abbasid சாம்ராஜ்யத்தில் தான் செய்யப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் புலாவில் இருந்து தான் பிரியாணியே தோன்றி இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முகலாய படையெடுப்பின் போது அவர்கள் கைப்பற்றிய தேசங்களில் பிரபலமடைய தொடங்கி இருக்கிறது. கால போக்கில் மக்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சமையல் முறைக்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டு மற்றும் அவர்களுக்கு விருப்பமான பொருட்களை சேர்த்து புலாவை செய்து சுவைக்க தொடங்கி இருக்கின்றனர். அதுவே இந்த சேமியா புலாவ் உதயமாகி இருப்பதற்கான காரணம்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

சேமியா புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 30 லிருந்து 35 நிமிடம் எடுக்கும்.

சேமியா புலாவை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

சேமியா புலாவை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அதை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒருநாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

சேமியா புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் சேமியாவில் இரும்பு சத்து, நார் சத்து, கார்போஹைட்ரேட், மற்றும் கால்சியம் இருக்கிறது. இவை எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் உபயோகிக்கும் பீன்ஸில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், நார் சத்து,  மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, மேங்கனீஸ், விட்டமின் Okay, C, மற்றும் A உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, செரிமான அமைப்பை சீர் செய்ய, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் வெங்காயத்தில் நார் சத்து, தண்ணீர் சத்து, புரத சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் தக்காளியில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் Okay உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

Semiya PulaoSemiya Pulao
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments