Wednesday, July 3, 2024
HomeFast Foodகாலிஃப்ளவர் தம் பிரியாணி - Cauliflower Dum Biryani Recipe in Tamil

காலிஃப்ளவர் தம் பிரியாணி – Cauliflower Dum Biryani Recipe in Tamil


காலிஃப்ளவர் தம் பிரியாணி ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் முதல் முறை சமைப்பவர்கள் கூட செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

பிரியாணி என்றாலே குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறதை நாம் அனைவரும் அறிவோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவு பிரியர்கள் மட்டுமின்றி அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். அவ்வளவு பிரசித்தி பெற்றதாக இருக்கும் இந்த பிரியாணியில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு ஸ்பெஷல் வெரைட்டியான காலிஃப்ளவர் தம் பிரியாணி. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான காலிஃப்ளவர் தம் பிரியாணியின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Cauliflower Biryani

Cauliflower Biryani

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பிரியாணி என்றால் பெரும்பாலும் பலரது வீட்டில் அது ஒன்று சிக்கன் பிரியாணியாக இருக்கும் இல்லை மட்டன் பிரியாணியாகத்தான் இருக்கும். சைவ பிரியர்கள் என்றால் அது வெஜிடபிள் பிரியாணி ஆக இருக்கும் அல்லது மஷ்ரூம் பிரியாணியாக இருக்கும். நாம் வழக்கமாக செய்து சுவைக்கும் பிரியாணிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த காலிஃப்ளவர் தம் பிரியாணி நிச்சயம் இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணி செய்ய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃபிளவர், பச்சை பட்டாணி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி கொண்டு நாம் தயாரிக்கும் காய்கறி மசாலா கலவை நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியுடன் நன்கு ஒன்றோடு ஒன்று வெந்து மிக அற்புதமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

காலிஃப்ளவரை நறுக்கியவுடன் கொதிக்கும் தண்ணீரில் பத்து நிமிடம் போட்டால் அதில் ஏதேனும் புழுக்கள் இருந்தால் அது மடிந்து விடும்.

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

பிரியாணி தென்னாசியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பிரியாணி பெரிசியன் புலாவில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவை முகலாயர் படையெடுப்பின்போது இந்திய சமையல் முறைக்குள் நுழைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்தியாவில் உள்ள பல சமையல் முறைக்கேற்ப்ப பிரியாணியில் சிறு சிறு மாற்றங்களை செய்து மக்கள் சுவைத்து வருகின்றனர்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணி செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 50 லிருந்து 55 நிமிடம் எடுக்கும்.

காலிஃப்ளவர் தம் பிரியாணியை முழுமையாக சுமார் 70 நிமிடத்தில் இருந்து 75 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் தம் பிரியாணியை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணியில்  சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் காலிஃப்ளவரில் நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் C, Ok, மற்றும் B6 உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணி புரத சத்து, நார் சத்து, விட்டமின் Ok மற்றும் A உள்ளது.

இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் Ok உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Cauliflower BiryaniCauliflower Biryani
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments