Monday, January 20, 2025
HomeFast Foodதக்காளி சாட் - Tamatar Chaat Recipe in Tamil

தக்காளி சாட் – Tamatar Chaat Recipe in Tamil


தக்காளி சாட் ஒரு வித்தியாசமான மற்றும் அற்புதமான மாலை நேர சாட் ஆகும். இதை நம் வீட்டில் இருக்கும் சுட்டீஸ்கள் மட்டுமல்ல பெரியவர்களும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

மாலை நேர சிற்றுண்டிகள் நம் அனைவரது வாழ்விலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை ஆகாது. மாலை நேரத்தில் ஏதேனும் வித்தியாசமான மற்றும் சுவையான சிற்றுண்டியை சுவைப்பதில் இருக்கும் மனநிறைவே தனி தான். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகவும் சுவையான தக்காளி சாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான தக்காளி சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

தக்காளி சாட் – Tamatar Chaat Recipe in Tamil

Tamatar Chaat

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டிகளை தினம் தோறும் சுவைக்க வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? வாரம் முழுவதும் சற்று கடினம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் நம்மால் செய்து சுவைக்க முடியும். அதற்கு இந்த தக்காளி சாட் நல்ல தொடக்கமாக இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

தக்காளி சாட் செய்ய நாம் பயன்படுத்தும் தக்காளி, மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சீரகம், கசகசா, சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா, பிளாக் சால்ட், இஞ்சி பொடி, பொடி வெல்லம் போன்ற மசாலாக்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து ஒரு அற்புதமான கலவையாக இருக்கும்.

இதற்காகவே ஸ்பெஷலாக நாம் தயார் செய்யும் புளி சட்னி மற்றும் மசாலா சர்க்கரை பாகை இதில் சேர்க்கும்போது இவை படுக்கச்சிதமாக இருக்கும். அதனுடன் ஓமப் பொடி மற்றும் காராபூந்தி இதனின் சுவையை வேற லெவலுக்கு எடுத்து செல்லும்.

சில குறிப்புகள்:

நன்கு பழமாக இருக்கும் தக்காளி பழங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் தக்காளி சாட் மிக சுவையாக இருக்கும். தக்காளி சற்று காயாக இருந்தாலும் அதை தவிர்த்து விடுங்கள்.

இவ் உணவின் வரலாறு:

தக்காளி சாட் முதல் முதலாக 1950 களில் இந்தியாவை சார்ந்த உத்தர் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் தீனா நாத் கேசரி என்பவரால் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு இருந்ததால் இவை குறுகிய காலத்திலேயே உத்தர் பிரதேசம் முழுவதும் பிரபலமடைய தொடங்கி இருக்கிறது. பின்னர் மெல்ல மெல்ல வட இந்தியா முழுவதும் இவை பிரபலம் அடைந்திருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

தக்காளி சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 30 லிருந்து 35 நிமிடம் எடுக்கும்.

தக்காளி சாட்டை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

தக்காளி சாட்டை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் அதை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் லேசாக சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் தக்காளி சாட்டை செய்யும் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

தக்காளி சாட் செய்ய நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் Ok உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

நாம் இதில் சேர்க்கும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் Ok மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் மஞ்சள் தூளில் நார் சத்து, புரத சத்து,  இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, சிங்க், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண், மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

Tamatar ChaatTamatar Chaat
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments