Monday, September 9, 2024
HomeFast Foodதேங்காய் சாதம் - Coconut Rice Recipe in Tamil

தேங்காய் சாதம் – Coconut Rice Recipe in Tamil


தேங்காய் சாதம் மிகவும் சிம்பிளான ஆனால் சுவையான ஒரு உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே சொற்பமான பொருட்களை பயன்படுத்தி செய்து முடித்து விடலாம். இவை ஒரு அட்டகாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

சிம்பிளாக எளிதில் குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் இல்லத்தரசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது எளிதில் செய்யக்கூடிய சிம்பிளான தேங்காய் சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான தேங்காய் சாதத்தின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

தேங்காய் சாதம் – Coconut Rice Recipe in Tamil

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

நாம் அனைவருமே எளிதில் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளின் பட்டியலை வைத்திருப்போம். அந்தப் பட்டியலில் இந்த தேங்காய் சாதம் நிச்சயம் இடம் பிடிக்க வேண்டிய ஒரு உணவு. இதை முதல் முதலாக சமைப்பவர்கள் கூட எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே சரியாக செய்துவிடலாம். இந்த தேங்காய் சாதத்தை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

தேங்காய் சாதம் செய்ய நாம் முதலில் முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலையை கொண்டு நாம் தேங்காய் கலவையை தயார் செய்வோம். இந்த தேங்காய் கலவையுடன் நாம் சேர்க்கும் வேக வைத்த பாசுமதி அரிசி நன்கு ஒன்றோடு ஒன்று ஒன்றி மிக அற்புதமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயிலிருந்து தனியாக ஒரு கையளவு எடுத்து தனியாக வைத்து அதை சாதத்தை இறக்குவதற்கு முன்னால் சாதத்தில் சேர்த்தால் பிரஷ்ஷாக இருக்கும் அந்த தேங்காய் சாதத்திற்கு கூடுதல் சுவையை கொடுக்கும்.

இவ் உணவின் வரலாறு:

நம்மில் பல பேர் தேங்காய் சாதம் தென்னிந்தியாவை மட்டுமே சார்ந்த ஒரு உணவு என்றுதான் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால் இவை இந்திய துணை கண்டத்தில் மட்டும் இன்றி தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லேட்டின் அமெரிக்காவில் உள்ள நாடுகளிலும் மக்களால் செய்து சுவைக்கப்படுகிறது. தேங்காய் சாதத்தை ஆசியாவை சார்ந்த இந்தோனேசியாவில் nasi uduk என்றும், மலேசியாவில் nasi lemak என்றும், மியான்மர் ohn htamin என்றும், தாய்லாந்தில் Khao tom mat, மற்றும் இலங்கையில் Kiribath என்றும் அழைக்கப்படுகிறது. லட்டின் அமெரிக்காவை சார்ந்த கொலம்பியா மற்றும் பனாமாவில் இதை arroz con coco என்றும், மற்றும் போட்டோ ரி கோவில் arroz con dulce என்றும் அழைக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

தேங்காய் சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

தேங்காய் சாதம் முழுமையாக சுமார் 40 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

தேங்காய் சாதத்தை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

தேங்காய் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம்  இதில் சேர்க்கும் வேர்க்கடலையில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இதய ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கான டயட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீஸ், விட்டமின் Ok மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் விட்டமின் B இருக்கிறது. இவை இருதய, பல், மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் உளுத்தம் பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இருதயம், கிட்னி, எலும்பு, மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

Coconut RiceCoconut Rice
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments