Saturday, November 23, 2024
HomeFast Foodகத்திரிக்காய் சாதம் - Eggplant Rice Recipe in Tamil

கத்திரிக்காய் சாதம் – Eggplant Rice Recipe in Tamil


கத்திரிக்காய் சாதம் தென்இந்தியாவில் ஒரு பிரபலமான உணவு. மணமான மற்றும் சுவையான இந்த கத்திரிக்காய் சாதம் உங்களுக்கு ஒரு அற்புதமான உணவு உண்ணும் அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான கத்திரிக்காய் சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான கத்திரிக்காய் சாதத்தின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

கத்திரிக்காய் சாதம் – Eggplant Rice Recipe in Tamil

Eggplant Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நாம் அலுவலகங்களுக்கு செல்லும்போது அல்லது நம் பிள்ளைகளுக்கு மதிய உணவாக சாம்பார் சாதமோ அல்லது தக்காளி சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ நாம் பல முறை செய்து கொடுத்து இருப்போம். இல்லை. செய்தே அலுத்து போய் இருப்போம் என்றாலும் அது மிகை ஆகாது. அவ்வாறு இருக்கையில் நமக்கு இந்த கத்திரிக்காய் சாதம் ஒரு வரப்பிரசாதம். இதை கட்டாயம் நீங்கள் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

கத்திரிக்காய் சாதம் செய்வதற்கு நாம் முதலில் ஸ்பெஷலான ‘வாங்கிபாத் மசாலா பொடி’ என்கின்ற பொடியை தயாரிக்க வேண்டும். இந்த பொடியை நாம் மிளகாய், மல்லி விதைகள், சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், புளி, மற்றும் பெருங்காயத்தை கொண்டு  தயாரிப்போம். இந்தப் பொடியில் தான் இந்த அருமையான கத்திரிக்காய் சாதத்திற்கான மேஜிக்கே இருக்கிறது. இந்தப் பொடியுடன், கத்திரிக்காய் மற்றும் சாதம் நன்கு ஒன்றோடு ஒன்று ஒன்றி மிகக் கச்சிதமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

கத்திரிக்காயை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்.

கத்திரிக்காய் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் கத்திரிக்காய் நன்கு இளசாக பார்த்து தேர்ந்தெடுத்தால் சாதம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

கத்திரிக்காய் சாதம் இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மைசூர் நகரில் உதயமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவில் இதை ‘Vangi Tub’ என்றுதான் அழைக்கிறார்கள். கர்நாடகாவில் உதயமான இவை மெல்ல மெல்ல காலப்போக்கில் இந்தியா முழுவதும் இன்று பிரபலமடைந்து இருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

கத்திரிக்காய் சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 35 லிருந்து 45 நிமிடம் எடுக்கும்.

கத்திரிக்காய் சாதத்தை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

கத்திரிக்காய் சாதத்தை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

கத்திரிக்காய் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் கத்திரிக்காயில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

நாம் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் விட்டமின் B இருக்கிறது. இவை இருதய, பல், மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இருதயம், கிட்னி, எலும்பு, மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் வறுத்த வேர்க்கடலையில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இதய ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கான டயட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.

இதில் நாம் சேர்க்கும் மிளகில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், இரும்பு சத்து, மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் நார் சத்து, புரத சத்து,  இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, சிங்க், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண், மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

 

Eggplant RiceEggplant Rice
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments