சென்னா சாட் ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான மாலை நேர சாட் ஆகும். இதை சமையலில் எந்த விதமான முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட வெகு எளிதில் செய்து விடலாம்.
நம்முடைய வீட்டில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அவர்களது வேலைகளை முடித்து அல்லது நம் பிள்ளைகள் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது அவர்கள் வழக்கமாக சுவைக்கும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு மாற்றாக ஏதேனும் வித்தியாசமான ஸ்னாக்ஸ் அவர்களது கண்ணில் தென்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான். அவர்களது முக மலர்ச்சியிலேயே நாம் அதை காண முடியும். நாம் இன்று இங்கு காண இருக்கும் இந்த சென்னா சாட் அவர்களுக்கு நிச்சயம் அந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதற்கு நாங்க கேரண்டி. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான சென்னா சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Chana Chaat
ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:
சென்னா சாட்டை விரும்பாதவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமான அளவாகத்தான் இருக்கும். அவ்வளவு பிரபலமாக இருக்கும் இந்த மாலை நேர சாட்டை நாம் அனைவரும் பெரும்பாலும் கடைகளில் வாங்கித்தான் சுவைத்திருப்போம். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் எளிய செய்முறையை பின்பற்றினால் இதை எந்தவித சிரமமும் இன்றி நீங்கள் வீட்டிலேயே செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்தலாம். இதனின் அட்டகாசமான மணமே வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கிச்சனுக்கு தானாக கூட்டி வந்துவிடும். இதை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள் வீட்டில் இருக்கும் குட்டீஸ்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெரியவர்களே இதை மீண்டும் மீண்டும் செய்து தரச் சொல்லி வற்புறுத்த தொடங்கி விடுவார்கள். ஏனென்றால் இதனின் சுவை அவ்வாறு. இந்த சென்னா சாட்டை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாரின் ரியாக்ஷன் இதற்கு எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.
ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:
சென்னா சாட் செய்ய நாம் முதலில் ஸ்பெஷலான புளி சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னியை தயார் செய்வோம். நாம் சென்னா சாட் செய்ய பயன்படுத்தும் வேகவைத்த கொண்டைக் கடலை, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா, பிளாக் சால்ட், மற்றும் நாம் தயாரித்த ஸ்பெஷலான சட்னிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து மிக மிக சுவையாக இருக்கும்.
சில குறிப்புகள்:
நாம் இதில் சேர்க்கும் தக்காளிப் பழம் மற்றும் வெள்ளரிக்காயில் இருக்கும் விதைகளை முற்றிலும் நீக்கி சேர்த்தால் சென்னா சாட் மிகவும் சுவையாக இருக்கும்.
இவ் உணவின் வரலாறு:
சென்னா சாட் செய்ய நாம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை சுமார் 1000 வருடங்களுக்கு மேலாகவும் இந்தியாவில் பயிரிடப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. அதனால் சென்னா சாட் இந்தியாவில் உதயமான ஒரு உணவு தான் என்று அடித்து சொல்லும் வரலாற்று நிபுணர்களால் இவை சரியாக இந்தியாவில் எந்த பகுதியில் உதயமானது என்பதை குறிப்பிட முடியவில்லை. ஆரம்ப காலகட்டங்களில் இவை வெறும் கொண்டைக் கடலை மற்றும் மசாலா பொருட்கள் மட்டுமே கொண்டு செய்யப்பட்டு வந்ததாகவும் பின்பு காலப்போக்கில் இதில் மக்கள் காய்கறிகளையும் சேர்த்து செய்து சுவைக்க தொடங்கியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
சென்னா சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.
இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.
சென்னா சாட்டை முழுமையாக சுமார் 40 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.
இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.
சென்னா சாட்டை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் அதை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் செய்யும் அன்றே சென்னா சாட்டை உண்டு விடுவது நல்லது.
இதை ஒற்றிய உணவுகள்:
இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:
சென்னா சாட் செய்ய நாம் பயன்படுத்தும் கொண்டைக் கடலையில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரும்பு சத்து குறைபாட்டை போக்க, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர்படுத்த உதவுகிறது.
நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் நாம் சேர்க்கும் வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரத சத்து, நார் சத்து, விட்டமின் C, மற்றும் Okay உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது.
இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.
நாம் இதில் உபயோகிக்கும் தக்காளியில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C மற்றும் Okay உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.
இதில் நாம் பயன்படுத்தும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்க்கு உதவுகிறது.