Thursday, November 14, 2024
HomeFast Foodபிரட் சாட் - Bread Chaat Recipe in Tamil

பிரட் சாட் – Bread Chaat Recipe in Tamil


பிரட் சாட் ஒரு மிகவும் அசத்தலான மாலை நேர சிற்றுண்டி ஆகும். இதை குறைந்த நேரத்திலேயே மிக எளிதாக செய்து விடலாம். இதை செய்ய அதிக பொருட்களும் தேவைப்படாது. 

பொதுவாகவே சாட் என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு மாலை நேர உணவாகத்தான் அவை இருக்கும். நாம் வழக்கமாக சுவைக்கும் சாட்டுகளுக்கு மாற்றாக வித்தியாச வித்தியாசமான சாட்டுகளை சுவைக்க வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான பிரட் சாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பிரட் சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

பிரட் சாட் – Bread Chaat Recipe in Tamil

Bread Chaat

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நாம் எந்தவிதமான சாட்டுகளை எடுத்தாலும் அவை செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். ஆனால் பிரட் சாட் அவ்வாறு அல்ல. இவை செய்வதற்கு மிக மிக எளிமையானவை. அது மட்டும் இன்றி இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. ஆகவே இந்த பிரட் சாட்டை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

பிரட் சாட் செய்ய முதலில் நாம் ஸ்பெஷலாக கடலை மாவு, சோள மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சாட் மசாலா, ஓம விதைகள், கசூரி மேத்தி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு ஒரு அட்டகாசமான மாவு கலவையை தயாரிப்போம். இந்த மாவு கலவையுடன் டோஸ்ட் செய்யப்பட்ட பிரட்டுடன் நாம் சேர்க்கும் மாதுளை பழம் விதைகள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, புளி சட்னி,  கொத்தமல்லி சட்னி, மற்றும் ஓமப் பொடி சேர்ந்து மிக அற்புதமாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

பிரட் சாட் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசை ஒட்டி உள்ள ஏதேனும் ஒரு பகுதியில் உதயமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. இவை இன்றைக்கும் வட இந்தியாவில் தான் பலராலும் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு மாலை நேர சிற்றண்டியாக திகழ்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

பிரட் சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

பிரட் சாட்டை முழுமையாக சுமார் 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

பிரட் சாட்டை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அதை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் லேசாக சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

பிரட் சாட் செய்ய நாம் சேர்க்கும் கடலை மாவில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இருதயம் மற்றும் எலும்பை ஆரோக்கியமாக வைக்க, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் மாதுளை பழத்தில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை இருதயம், மூளை, மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், விட்டமின் C மற்றும் Ok உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

Bread ChaatBread Chaat
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments